என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி பேராசிரியர்"
- கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது 27 வயது மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம்-ஹூப்ளி ரெயிலில் எஸ்.3 முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட னர்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில், ராசிபுரம் வந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் சையது இப்ராகிம் (வயது 57), என்பவர் அந்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிடவே, பெற்றோர் உள்பட அனைவரும் சேர்ந்து சையது இப்ராகிமை பிடித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த இளம்பெண், ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது இப்ராகிமை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்தது.
கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அவரை 15 நாள் காவலில் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார், சையது இப்ராகிமை அழைத்துச்சென்று நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடந்த உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கில் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு சிறந்த தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் என்ற விருது கிடைத்தது.
கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த நிகழ்வுகளை சிறப்பாக செய்தமைக்கான சிறந்த கல்லூரியாகவும் சாகிர் உசேன் கல்லூரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் நாசரை கல்லூரி ஆட்சிகுழு செயலாளர் ஜபருல்லான், ஆட்சிகுழு நிர்வாகிகள், முதல்வர் அப்பாஸ்மந்திரி ,அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குநர் வேதிராஜன், கள ஒருங்கிணைப்பாளர் அருமைரூபன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
- கல்லூரிகளில் பேராசிரியர்கள் ‘மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
- இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.
- மூன்று முறை கருக்கலைப்பு செய்ததால்மாணவியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- ஒருவித இறுக்கத்தில் இருந்த மாணவியிடம் சக மாணவர்கள் பேச்சு கொடுத்தபோது கல்லூரி பேராசிரியர் தன்னை சீரழித்த தகவலை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
திருச்சி:
திருச்சியில் புகழ்பெற்ற ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் பி.எச்டி. போன்ற ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. தற்போதைய நிலையில் 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் நம்பர் ஒன் இடத்தை இந்த கல்லூரி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை தான் சென்னை பிரசிடென்சி கல்லூரி பெற்றது.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்று திகழ்ந்த இந்த கல்லூரி தற்போது ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவரின் காம லீலைகளால் சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புகாருக்கு ஆளான நபர் 1991-ல் தனது 25 வயதில் மேற்கண்ட கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் வேறு சில கல்லூரிகளில் பணியாற்றி விட்டு மீண்டும் இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
இவரது காம லீலைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. முதலில் இந்த பேராசிரியர் தான் விரும்பும் மாணவியிடம் நைசாக பேச்சு கொடுப்பார். அவரது பின்புலத்தை அறிந்து கொண்டு ஏழ்மை நிலையில் இருந்தால் சில பண உதவிகளையும் செய்வார். அதன் பின்னர் தனது சபல புத்தியை காண்பிக்க தொடங்குவார்.
அந்த மாணவி பிஎச்டி படிப்பவராக இருந்தால் ப்ராஜெக்ட் வேலை என தனது வீட்டுக்கு வரவழைப்பார். அங்கே திராட்சை ஜூஸ் கொடுப்பார். அதில் லேசாக மது அல்லது மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டால் படுக்கையில் வைத்து சீரழித்து விடுவாராம்.
இவ்வாறு பல மாணவிகளை இந்த பேராசிரியர் சீரழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அவமானம் கருதி வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். வேறு சிலர் கல்லூரிகளை மாற்றிக்கொண்டு சென்று விட்டனர். எதிர்த்து கேட்கும் மாணவிகளிடம் பெயில் ஆகிவிடுவேன் என மிரட்டி தப்பித்து வந்தார்.
இவரின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இது இன்னும் அந்த பேராசிரியருக்கு சாதகமாக போய்விட்டது. வீட்டில் தனியாக இருந்ததால் எந்த நேரத்திலும் மாணவிகளை வீட்டுக்கு வரவழைத்து அத்துமீறி உள்ளார்.
இதில் எம்.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை மயக்கி தனது வலையில் வீழ்த்தினார். பின்னர் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி பல நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பம் தரித்த அந்த மாணவி கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அப்போது அடுத்த ஆண்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி கருக்கலைப்பு செய்து தப்பினார்.
பின்னர் மீண்டும் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போதும் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். மறுபடியும் பொய்களை அவிழ்த்து விட்டு கருக்கலைப்பு செய்ய வைத்தார். கடைசியாக தற்போது எம்.பில். படித்து வரும் அந்த மாணவி மீண்டும் மூன்றாவது முறையாக அந்த பேராசிரியரிடம் சிக்கி கர்ப்பம் அடைந்தார்.
உடனே மாணவி பேராசிரியரிடம் சென்று திருமணம் செய்து விடுங்கள் என கெஞ்சி கேட்டார். அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த பேராசிரியர் கட்டாயப்படுத்தி மிரட்டி மீண்டும் கருக்கலைப்பு செய்துள்ளார்.
மூன்று முறை கருக்கலைப்பு செய்ததால் அந்த மாணவியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருவித இறுக்கத்தில் இருந்த அந்த மாணவியிடம் சக மாணவர்கள் பேச்சு கொடுத்தபோது கல்லூரி பேராசிரியர் தன்னை சீரழித்த தகவலை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதன் மூலம் பேராசிரியரின் காம லீலைகள் வெளி உலகத்திற்கு அம்பலமாகியுள்ளது. அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக முதல்வரை சந்தித்து புகார் அளித்தனர்.
உடனே முதல்வர் அந்த பேராசிரியரிடம் விசாரணை நடத்த முற்பட்டார். ஆனால் மேலிட செல்வாக்கை காட்டி தப்பித்து விட்டார். உடனே பாதிக்கப்பட்ட அந்த மாணவி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் கல்லூரி கல்வி இயக்குனராக அறிவுறுத்தலின்படி விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு அந்த விசாரணை அறிக்கை உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்த துறை தலைவரின் கீழ் 17 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த 17 பேரும் அவருக்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளனர்.
இது பற்றி கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, இந்தக் கல்லூரியின் ஆங்கிலத்துறைக்கு என தனி மவுஸ் உள்ளது. இங்கு பிஎச்டி முடித்த மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஒழுக்கத்திலும் தமிழக அளவில் இந்த கல்லூரிக்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது ஒரு பேராசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கையால் மனம் வேதனையாக இருக்கிறது. அவரை சஸ்பெண்ட் செய்து வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருக்கும் மாணவிகளையாவது காப்பாற்ற அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த துறை தலைவரின் சேட்டைகளுக்கு 25 வயது நிரம்பிய கௌரவ பேராசிரியர் ஒருவர் உதவிகள் செய்து வருகிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரிக்கு இணையாக போட்டி போடும் இந்த கல்லூரியை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- தனியார் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
- தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிதிஷ் லால்(வயது 28). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து விஜயகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிதிஷ்லாலை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று குழித்துறை ஆற்றில் நிதிஷ் லால் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த நிதிஷ் லால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான கல்லூரி பேராசிரியர் நிதிஷ் லால் ஆற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொ ண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.
அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசார ணையில் நிதிஷ் லால் மாயமா வதற்கு சில நாள்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிணமாக கிடந்தார். எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆற்றின் கரையில் இருந்த நிதிஷ் லால் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை எல்.ஜி. நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 51). இவரது மகனுக்கு மருத்துவம் படிக்க சீட்டு வாங்கித்தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் ரவிராஜன் (51), அவரது நண்பர் கணேஷ்பாபு என்ற தென்னவன், இவரது மனைவி பிரேமா (51) ஆகியோர் ரூ.10 லட்சம் வாங்கியதாக கூறப்படுகி றது. ஆனால் குறிப்பிட்ட நாளில் மருத்துவச்சீட்டு வாங்கித்தரவில்லை.
இதனால் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு சுப்புலட்சுமி கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் 3 பேரும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் சுப்புலட்சுமி புகார் செய்தார். இதன் பேரில் கல்லூரி பேராசிரியர் ரவிராஜன், கணேஷ்பாபு, பிரேமா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கும்பகோணம் ஆயிக்குளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் வேலன் என்பவர் நேற்று இரவு சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை யாரோ எடுக்காமல் விட்டு சென்று விட்டது தெரியவந்தது. பணம் தாமதமாக வந்ததால் அவர் கவனிக்காமல் சென்று இருக்கலாம் என்று கருதிய செந்தில் வேலன் ஏ.டி.எம். சென்டரில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார்.
அதனை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் ஏ.டி.எம். அறையில் உள்ள கேமிராவையும், எந்திரத்தையும் ஆய்வு செய்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பேராசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். பேராசிரியர் செந்தில் வேலன் ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதுடன் பகுதி நேரம் சாலையோர ஓட்டலில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்